Enable Javscript for better performance
ஸ்டெர்லைட் ஆலையில்...- Dinamani

சுடச்சுட

    

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருட்டாலையில் வியாழக்கிழமை நடைபெற்றசுதந்திர தின விழாவில் சுங்கத் துறை கூடுதல் ஆணையர் என்.ஜே. குமரேஷ் தேசியக் கொடியை ஏற்றினார்.

    ஆலை வளாகத்தில் உள்ள கம்பத்தில் தேசியக் கொடியை சுங்கத் துறை கூடுதல் ஆணையர் என். ஜே. குமரேஷ் ஏற்றி வைத்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினார். இதையடுத்து பாதுகாப்பு பிரிவு வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட அவர், சிறப்பாகப் பணியாற்றிய ஊழியர்கள், பாதுகாப்பு மற்றும் தீயணைப்புப் பிரிவு ஊழியர்களுக்கு பரிசுகளை வழங்கிப் பாராட்டினார்.

    நிகழ்ச்சியில் ஸ்டெர்லைட் ஆலை முதன்மைச் செயல் அலுவலர் ராம்ராத், திட்டங்கள் துறைத் தலைவர் தனவேல், நிதித் துறை தலைவர் நரசிம்மன்,

    மனித வளத் துறை தலைவர் சுரேஷ் போஸ், பாதுகாப்பு பிரிவுத் தலைவர் அனுப்,

    ஸ்டெர்லைட் அனல் மின் நிலைய பாதுகாப்பு பிரிவு தலைவர் பாலகிருஷ்ணன் மற்றும் ஸ்டெர்லைட் ஆலை அதிகாரிகள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai