அதிமுக அரசின் சாதனை விளக்க துண்டுப் பிரசுரம் விநியோகம்
By தூத்துக்குடி | Published on : 17th August 2013 03:17 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
அதிமுக அரசின் இரண்டாண்டு சாதனைகளை விளக்கி தூத்துக்குடி மாவட்டம், புதூரில் பொதுமக்களிடம் துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன.
தூத்துக்குடி மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி சார்பில் புதூர் ஒன்றியத்தில் அதிமுக அரசின் இரண்டாண்டு சாதனை விளக்க பிரசாரம் வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணிச் செயலரும், மாவட்ட ஊராட்சித் தலைவருமான என். சின்னத்துரை விழாவுக்கு தலைமை வகித்தார்.
விளாத்திகுளம் சட்டப்பேரவைத் தொகுதி முன்னாள் உறுப்பினர் பி. சின்னப்பன், மாவட்ட கவுன்சிலர் ராஜகோபால், புதூர் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் தனஞ்செயன், பேரூராட்சி செயலர் எஸ்.எஸ். ஆர். அழகுபாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அதிமுக மீனவரணி மாநில இணைச் செயலர் எஸ். ஜெனிபர் சந்திரன், மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணிச் செயலர் என். சின்னத்துரை ஆகியோர் அரசின் இரண்டான்டு சாதனை விளக்க துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு விநியோகித்தனர்.
நிகழ்ச்சியில் மாவட்டப் பொருளாளர் ஜெபமாலை, மாவட்ட இளைஞரணி இணைச் செயலர் பால்ராஜ், துணைச் செயலர் ஆசூர். காளிபாண்டியன், மாவட்ட கவுன்சிலர்கள் லட்சுமணப்பெருமாள், மதியழகன், மாநகராட்சி கவுன்சிலர் ஜெயக்குமார், ஒன்றிய ஜெயலலிதா பேரவைச் செயலர் கணபதி, தலைமை செயற்குழு உறுப்பினர் குமாரத்தாய் உள்பட பலர் கலந்து கொண்டனர்.