ஆகஸ்ட் 17 மின் தடை
By தூத்துக்குடி, | Published on : 17th August 2013 03:16 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
தூத்துக்குடி மாநகரப் பகுதியில் சனிக்கிழமை (ஆக.17) மின்சாரம் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அந்த அறிவிப்பு ரத்து செய்யப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தூத்துக்குடி மாநகர மின்வாரிய அலுவலக செயற்பொறியாளர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தூத்துக்குடி- எட்டயபுரம் சாலையில் அமைந்துள்ள துணை மின் நிலையம் மற்றும் ஓட்டப்பிடாரம் துணைமின் நிலையத்தில் சனிக்கிழமை (ஆக.17) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் அன்றைய தினம் மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தமிழகம் முழுவதும் ஆசிரியர் தகுதித்தேர்வு சனிக்கிழமை (ஆக.17) நடைபெற உள்ளதால் தேதி குறிப்பிடாமல் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் ஒத்திவைக்கப்படுவதாகவும் அன்றைய தினம் மின்தடை ஏற்படாது எனவும் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.