Enable Javscript for better performance
இன்று ஆசிரியர் தகுதித் தேர்வு: 6402 பேர் எழுதுகின்றனர் - Dinamani

சுடச்சுட

    

    இன்று ஆசிரியர் தகுதித் தேர்வு: 6402 பேர் எழுதுகின்றனர்

    By தூத்துக்குடி  |   Published on : 17th August 2013 03:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழகம் முழுவதும் ஆசிரியர் தகுதித் தேர்வு சனிக்கிழமை (ஆக.17) தொடங்கும் நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் 6402 பேர் தேர்வு எழுதுகின்றனர்.

    தமிழகம் முழுவதும் இடைநிலை ஆசிரியர்கள் பணிக்கான தகுதித் தேர்வு (தாள்-1) சனிக்கிழமையும், பட்டதாரி ஆசிரியர்கள் பணிக்கான தகுதித் தேர்வு (தாள்-2) ஞாயிற்றுக்கிழமையும் நடைபெறுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் இரு தேர்வுகளையும் 15,427 பேர் எழுதுகின்றனர்.

    முதல்நாளான சனிக்கிழமை (ஆக.17) நடைபெறும் ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1-ஐ கோவில்பட்டி கல்வி மாவட்டத்தில் 8 மையங்களில் 2822 பேரும், தூத்துக்குடி கல்வி மாவட்டத்தில் 9 மையங்களில் 3580 பேரும் என மொத்தம் 6402 பேர் எழுதுகின்றனர்.

    இதேபோல, இரண்டாம் நாளான ஞாயிற்றுக்கிழமை (ஆக.18) நடைபெறும் ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 2-ஐ கோவில்பட்டி கல்வி மாவட்டத்தில் 8 மையங்களில் 2853 பேரும், தூத்துக்குடி கல்வி மாவட்டத்தில் 17 கல்வி மையங்களில் 6172 பேரும் என மொத்தம் 9025 பேர் எழுதுகின்றனர்.

    தேர்வுக்கான ஏற்பாடுகளை பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநர் கருப்பசாமி தலைமையில் கல்வித் துறை அதிகாரிகளும், மாவட்ட நிர்வாக அதிகாரிகளும் செய்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai