Enable Javscript for better performance
இலவச சைக்கிள் வழங்கும் விழா- Dinamani

சுடச்சுட

    

    ஓட்டப்பிடாரம் வ.உ.சி. அரசு மேல்நிலைப்பள்ளியில் வெள்ளிக்கிழமை மாணவர், மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது.

    விழாவுக்கு பள்ளித் தலைமையாசிரியை க.சகுந்தா தலைமை வகித்தார். உதவி தலைமையாசிரியர் சற்குணராஜ் முன்னிலை வகித்தார்.

    மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 65 மாணவர், மாணவிகளுக்கு கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. இலவச சைக்கிள்களை வழங்கிப் பேசினார். விழாவில் அனைவருக்கும் கல்வி இயக்க ஓட்டப்பிடாரம் வட்டார மேற்பார்வையாளர் ஏ.விஜயன், மாவட்ட என்.எஸ்.எஸ். தொடர்பு அலுவலர் கள்ளாண்டபெருமாள், கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai