Enable Javscript for better performance
திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டத்தில் சுதந்திர தினவிழா- Dinamani

சுடச்சுட

    

    திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டத்தில் சுதந்திர தினவிழா

    By திருச்செந்தூர்,  |   Published on : 17th August 2013 03:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    :திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டத்தில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது.

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் இணை ஆணையர் அலுவலகம் முன் உள்ள கொடிக்கம்பத்தில் தக்கார் ப.தா.கோட்டை மணிகண்டன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து கருணை இல்ல மாணவர்களுக்கு இனிப்பு வழங்கினார்.

    திருக்கோவில் கந்தவேல் சஷ்டி மண்டபத்தில் வழிபாடு மற்றும் பொது விருந்து நடைபெற்றது. இணை ஆணையர் (பொ) ம.அன்புமணி, கோட்டாட்சியர் ப.கொங்கன், பேரூராட்சித் தலைவர் மு.சுரேஷ்பாபு, ஊராட்சி ஒன்றியத்தலைவர் லி.ஹேமலதா லிங்ககுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தூத்துக்குடி மேயர் எல்.சசிகலா புஷ்பா பொது மதிய விருந்தை தொடங்கி வைத்தார்.

    பேரூராட்சி அலுவலகம்: திருச்செந்தூர் சிறப்பு நிலை பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற விழாவுக்கு  பேரூராட்சி செயல் அலுவலர் கொ.ராஜையா தலைமை வகித்தார். பேரூராட்சித் தலைவர் மு.சுரேஷ்பாபு தேசியக் கொடியேற்றி இனிப்பு வழங்கினார்.

    நீதிமன்றம்:திருச்செந்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நீதித்துறை நடுவர் நம்பிராஜன் தேசியக் கொடியேற்றினார்.

    கோட்டாட்சியர் அலுவலகம்: கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் ப.கொங்கனும், வட்டாட்சியர் அலுவலகத்தில் மண்டல துணை வட்டாட்சியர் ராஜீவ் தாகூர் ஜேக்கப்பும், தாலுகா காவல் நிலையத்தில் ஆய்வாளர் கோ.பத்மநாப பிள்ளையும், கோவில் காவல் நிலையத்தில் செ.பிரதாபனும் தேசியக் கொடியை ஏற்றினர்.

    திருச்செந்தூர் சட்டப்பேரவை  உறுப்பினர் அலுவலகத்தில் பொறுப்பாளர் வேல் ராமகிருஷ்ணன் தேசியக் கொடியேற்றினார்.

    திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி ஒன்றியத் தலைவர் லி.ஹேமலதா லிங்ககுமார் தேசியக் கொடியேற்றினார்.

    திருச்செந்தூர் நகர காங்கிரஸ் தலைவர் குறிஞ்சி டி.எஸ்.சுரேஷ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சு.கு.சந்திரசேகரன் தியாகி நாராயணன் நினைவுக் கம்பத்தில் கொடியேற்றினார்.

     திருச்செந்தூர் ஸ்ரீ சரவணய்யர் நடுநிலைப் பள்ளியில் சுதந்திர தினவிழா, சுவாமி விவேகானந்தர் ஜயந்தி விழா, பெற்றோர்- ஆசிரியர் கழகக் கூட்டம் என முப்பெரும் விழா நடைபெற்றது. ராமையா பாகவதர் செந்தில்முருகன் நடுநிலைப் பள்ளியில் தலைமையாசிரியர் மூ.முருகேசன் தேசியக் கொடியேற்றி இனிப்பு வழங்கினார்.

    ஸ்ரீவைகுண்டம்: ஸ்ரீவைகுண்டம் குமரகுருபர சுவாமிகள் கலைக்கல்லூரியில் கல்லூரி முதல்வர் சங்கரநாராயணன் தேசியக் கொடியேற்றினார்.

     குமரகுருபர சுவாமிகள் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுதந்திர தினவிழா, பள்ளி நிறுவனர் தின விழா, பரிசளிப்பு விழா என நடைபெற்ற முப்பெரும் விழாவுக்கு பள்ளித் தாளாளர் ராமானுஜம் தலைமை வகித்தார். ஓய்வு பெற்ற சுங்கத் துறை அதிகாரி சங்கரலிங்கம் தேசியக் கொடியேற்றி இனிப்புகள் வழங்கினார். தலைமை ஆசிரியர் முத்துசிவன் வரவேற்றார். பள்ளிச் செயலர் முகமது அப்துல் காதர், இயக்குநர்கள் சிவசுப்பிரமணியன்,வைகுண்டபெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    செவன்த்டே மெட்ரிகுலேசன் பள்ளியில் பேராசிரியர் சேதுராமன் தேசியக் கொடியேற்றினார். புனித ஜேம்ஸ் மெட்ரிகுலேசன் பள்ளியில் அசிசீ இல்ல மதர் சேகரி தலைமை வகித்து தேசியக் கொடியேற்றினார். பேட்மாநகரம் எம்.எம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் முதல்வர் ஹம்சா தேசியக் கொடியேற்றி இனிப்புகள் வழங்கினார்.

    ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவிலில் சுதந்திரதின விழாவை முன்னிட்டு நடைபெற்ற சமபந்தி விருந்தில் பேரூராட்சித் தலைவர் அருணாசலம், வழக்குரைஞர் சங்கத் தலைவர் கருப்பசாமி, கோவில் ஸ்தலத்தார் ராஜப்பா வெங்கடாச்சாரி, நிர்வாக அதிகாரி தனலட்சுமி, ஆய்வாளர் மாரியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் காமாட்சிதாசன் தேசியக் கொடியேற்றினார். ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் பொற்செழியன் தேசியக் கொடியேற்றினார். எம்.எல்.ஏ. அலுவலகத்தில் ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சித் தலைவர் அருணாசலம் தேசியக் கொடியேற்றினார். நீதிமன்ற வளாகத்தில் மாஜிஸ்திரேட் நம்பிராஜன் தேசியக் கொடியேற்றினார்.

    காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர் தில்லை நாகராஜன் தேசியக் கொடியேற்றினார். உதவி காவல் ஆய்வாளர்கள் வேல்ராஜ், அருணாசலம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

     தீயணைப்பு நிலையத்தில் நிலைய அலுவலர் ஜெயராமன்  தேசியக் கொடியேற்றினார். வனத்துறை சார்பில் கருங்குளத்தில் நடைபெற்ற விழாவில் வனச் சரக அலுவலர் நெல்லைநாயகம் தேசியக் கொடியேற்றி மரக்கன்றுகளை நட்டார்.

    அரசு மருத்துவமனையில் மருத்துவர் பெட்ரிசியா செல்வன் தேசியக் கொடியேற்றினார். மருத்துவர்கள் பொன்இசக்கி, அஜிஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சி அலுவலகத்தில் பேரூராட்சித் தலைவர் அருணாசலம் தேசியக் கொடியேற்றினார்.

     ஆழ்வார்திருநகரி பேரூராட்சி அலுவலகத்தில் பேரூராட்சித் தலைவர் ஆதிநாதன் தேசியக் கொடியேற்றி இனிப்புகளை வழங்கினார்.  திருச்செந்தூர் அருகே உள்ள ஆறுமுகபுரம் தூ.நா.தி.அ.க. தொடக்கப் பள்ளியில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

    ஓட்டப்பிடாரம்:ஓட்டப்பிடாரம் பகுதியில் உள்ள அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளில் சுதந்திர தினவிழா நடைபெற்றது.

    வ.உ.சி. இல்லம்: ஓட்டப்பிடாரம் வ.உ.சி. பிறந்த இல்லத்தில் நடைபெற்ற விழாவில் வ.உ.சி சிலைக்கு ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத் தலைவர் ரா.காமாட்சி மாலை அணிவித்து, தேசியக் கொடி ஏற்றினார்.

    ஊராட்சி ஒன்றிய அலுவலகம்: ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி ஒன்றியத் தலைவர் ரா.காமாட்சி தேசிய கொடி ஏற்றி மாணவர்களுக்கு இனிப்பு வழங்கினார்.

    வட்டாட்சியர் அலுவலகம்: ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் மு.ராமகிருஷ்ணன் தேசிய கொடி ஏற்றினார். 

    வ.உ.சி அரசு மேல்நிலைப்பள்ளி: ஓட்டப்பிடாரம் வ.உ.சி. அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் தலைமையாசிரியர் க.சகுந்தலா தேசிய கொடி ஏற்றினார்.

    டி.எம்.பி மெக்கவாய் மேல்நிலைப் பள்ளி: ஓட்டப்பிடாரம் டி.எம்.பி.மெக்கவாய் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு பள்ளித் தலைமையாசிரியர் ஜே.வனஜாமங்களசெல்வி தலைமை வகித்தார். பள்ளித் தாளாளர் கோ.ஜேம்ஸ்பாஸ்கர் முன்னிலை வகித்தார். ஓட்டப்பிடாரம் காவல் உதவி ஆய்வாளர் கனகராஜ் தேசியக் கொடி ஏற்றினார்.

    நாகம்பட்டி மனோ கல்லூரி: கல்லூரி முதல்வர் ஐ.ஜெயசுந்தர்சிங் தலைமை வகித்தார். நாகம்பட்டி ஊராட்சித் தலைவர் கொ.மாரியப்பன் தேசியக் கொடியை ஏற்றி வைத்துப் பேசினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai