Enable Javscript for better performance
ஸ்ரீவைகுண்டம் அணையில் அமலை செடிகள் அகற்றும் பணி தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    ஸ்ரீவைகுண்டம் அணையில் அமலை செடிகள் அகற்றும் பணி தொடக்கம்

    By ஸ்ரீவைகுண்டம்,  |   Published on : 17th August 2013 03:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    :ஸ்ரீவைகுண்டம் வடகாலில் தூர்வாரும் பணியைத் தொடர்ந்து பொதுப்பணித் துறையில் புதிதாக பொறுப்பேற்றுள்ள உதவி செயற்பொறியாளர் (பொறுப்பு) தமிழ்செல்வன் வியாழக்கிழமை அணையிலுள்ள அமலைச் செடிகளை அகற்றும் பணியையும் தொடங்கி வைத்தார்.

    ஸ்ரீவைகுண்டம் அணையில் உள்ள அமலைச் செடிகளையும், பாசனக் கால்வாய்கள் மற்றும் 53 குளங்களையும் தூர்வார வேண்டுமென பொதுமக்களும், விவசாயிகளும் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

    வடகால் பகுதி முழுவதும் மணல் மேடாகி அமலை மற்றும் பாசி படர்ந்த நீர்ச் செடிகள் அதிக அளவில் இருந்ததால் கோரம்பள்ளம் குளத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டும் முழுமையாக தண்ணீர் சென்றடையவில்லை.

    இதனால் உதவி செயற்பொறியாளர் (பொறுப்பு) தமிழ்செல்வன் வனத்துறையின் அனுமதியுடன் வடகால் வாய்க்காலை தூர்வாரும் பணியை தொடங்கினார்.

    இதுகுறித்து வியாழக்கிழமை தினமணி நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. இதை தொடர்ந்து அணையில் அமலைச் செடிகளை அகற்றும் பணியை உதவி செயற்பொறியாளர் (பொறுப்பு) தமிழ்செல்வன் வியாழக்கிழமை தொடங்கி வைத்தார். வடகால் பிரிவு அலுவலர் ரகுநாதன், உதவிப் பொறியாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, மாரிமுத்து மற்றும் பொதுப்பணித் துறை பணியாளர்கள் கலந்து கொண்டனர். வெள்ளிக்கிழமை வரை வடகால், தென்கால் அணைப்பகுதிகளில்   அமலைச் செடிகள் அகற்றப்பட்டன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai