Enable Javscript for better performance
ஆங்கில மன்றத் தொடக்க விழா - Dinamani

சுடச்சுட

    

    : சாத்தான்குளம் அருகேயுள்ள கொம்மடிக்கோட்டை ஸ்ரீசங்கரா பகவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆங்கில மன்றத் தொடக்க விழா, ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பிறந்த நாள் விழா நடைபெற்றது.

     கல்லூரி முதல்வர் சி.நாகராஜன் தலைமை வகித்தார். துணை முதல்வர் மகேஷ்குமார் முன்னிலை வகித்தார். சவூதி அரேபியாவைச் சேர்ந்த ஆங்கில மொழியியல் துறைப் பேராசிரியர் தமீமுல் அன்சாரி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு விழாவைத் தொடக்கிவைத்தார். தொடர்ந்து மாணவர்-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தமிழ்த் துறைத் தலைவர் பாலகிருஷ்ணன் பேசினார். ஆங்கிலத் துறை இணைப் பேராசிரியை பெனாசிர் வரவேற்றார். விரிவுரையாளர் சிவநாதன் நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai