Enable Javscript for better performance
ஆறுமுகனேரி, காயல்பட்டினம், சாத்தான்குளத்தில் சுதந்திர தின விழா- Dinamani

சுடச்சுட

    

    ஆறுமுகனேரி, காயல்பட்டினம், சாத்தான்குளத்தில் சுதந்திர தின விழா

    By ஆறுமுகனேரி,   |   Published on : 18th August 2013 12:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆறுமுகனேரி, காயல்பட்டினம் பகுதிகளில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

    காயல்பட்டினம் நகராட்சி சார்பில் நகர்மன்ற வளாகத்தில் நடைபெற்ற விழாவில் நகர்மன்றத் தலைவர் ஐ. ஆபிதா ஷேக் தேசியக் கொடியேற்றினார்.

    ஆறுமுகனேரியில் பணிபுரியும் வட மாநில இளைஞர்கள் 40 பேர் தாங்கள் தங்கியிருந்த இல்லத்தை அலங்கரித்து கொடியேற்றி இனிப்பு வழங்கினர். ஆறுமுகனேரி உப்புத் தொழிலாளர்கள் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனைச் சங்கத்தில் தலைவர் சு. லட்சுமணனும், ஆறுமுகனேரி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் தலைவர் கா. ராகவனும், ஏ.கே.எல். கூட்டுறவு பண்டகசாலையில் தலைவர் சோ. வெங்கடேசனும், எஸ்.ஆர்.எஸ். கார்டனில் திருச்செந்தூர் கூட்டுறவு சார் பதிவாளர் பத்மநாபனும் கொடியேற்றினர்.

    காமராஜ் சோமசுந்தரி மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற விழாவில், திருச்செந்தூர் தேவஸ்தான முதன்மை தணிக்கை ஆய்வாளர் து. சக்திகுமார் கொடியேற்றினார்.

    இந்து தொடக்கப் பள்ளி, சரஸ்வதி நடுநிலைப் பள்ளி மற்றும் இந்து மேல்நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகள் இணைந்து நடத்திய விழாவில் ஆறுமுகனேரி நகர்நல மன்றத் தலைவர் பி. பூபால்ராஜன் கொடியேற்றினார்.முத்து கார்டன் பெர்ல்ஸ் பப்ளிக் பள்ளியில் ஓய்வுபெற்ற முதன்மைக் கல்வி அலுவலர் தாண்டேஸ்வரன் கொடியேற்றினார்.

    பூச்சிக்காடு இந்து தொடக்கப் பள்ளி, உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் ஜெ.எஸ். ஆபேத்நேகோ தலைமை வகித்தார். காயாமொழி தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி மேலாளர் டி. முருகன் கொடியேற்றினார்.

    உடன்குடி:  சுதந்திர தினத்தையொட்டி,  குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் சமபந்தி அன்னதானம் நடைபெற்றது. நிகழ்ச்சியை உடன்குடி ஊராட்சி ஒன்றியத் தலைவி மல்லிகா தொடக்கிவைத்தார்.

    செட்டியாபத்து ஐந்துவீட்டு சுவாமி கோவிலில் நடைபெற்ற சமபந்தி அன்னதானத்தில் கோவில் நிர்வாக அதிகாரி ரா. கணபதி முருகன், கணக்கர் கோபாலகிருஷ்ணன் பங்கேற்றனர்.

    உடன்குடி பிரதான பஜாரில் காங்கிரஸ் கட்சி சார்பில் கொடி ஏற்றப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டன. நகரத் தலைவர் ஆனந்தன் தலைமை வகித்தார்.

    உடன்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒன்றிய தலைவியும், உடன்குடி பேரூராட்சி மன்ற வளாகத்தில் நடைபெற்ற விழாவில் பேரூராட்சித் தலைவி ஆயிஷா உம்மாளும், வியாபாரிகள் முன்னேற்ற சங்க அலுவலகத்தில் தலைவர் ரவியும் கொடியேற்றினர். பண்டாரஞ்செட்டிவிளை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுதந்திர தின விழா நடைபெற்றது.

    கோவில்பட்டி செண்பகவல்லி அம்பாள் கோவிலில் கோட்டாட்சியர் கதிரேசன் தலைமையில் பொதுவிருந்து நடைபெற்றது. நகர்மன்றத் தலைவி ஜான்சிராணி, துணைத் தலைவர் ராமர், நகர அதிமுக செயலர் சங்கரபாண்டியன், ஒன்றியச் செயலர் அய்யாத்துரைப்பாண்டியன் பங்கேற்றனர்.

    எப்போதும்வென்றான்:எப்போதும்வென்றான் சோலைச்சாமி கோவிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு பூஜைகளைத் தொடர்ந்து, பொது விருந்து நடைபெற்றது.

    சாத்தான்குளம்:சாத்தான்குளம் நீதிமன்றத்தில் வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் ஏ.ஆர்.பி.டி. கல்யாண்குமாரும், சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய ஆணையர் வே. சங்கரநாராயணனும், சாத்தான்குளம் பேரூராட்சி அலுவலகத்தில் பேரூராட்சித் தலைவர் ஏ.எஸ். ஜோசப்பும் கொடியேற்றினர்.

    சாத்தான்குளம் செட்டியார் தெற்கு தெருவில் திருவள்ளுவர் ஆண்கள் சுய உதவிக்குழு சார்பில் நடைபெற்ற விழாவுக்கு குழுத் தலைவர் அ.ந. சங்கரநாராயணன் தலைமை வகித்தார்.

     புனித ஜோசப் கல்வி நிறுவனத்தில் புதுக்குளம் ஊராட்சித் தலைவர் ச. பாலமேனனும், சாத்தான்குளம் வட்டார காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற விழாவில் வட்டாரத் தலைவர் ஜனார்த்தனனும், அடைக்கலாபுரம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் பள்ளக்குறிச்சி ஊராட்சித் தலைவர் இரா. திவாகரனும் கொடியேற்றினர்.

    கோமானேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஊராட்சித் தலைவர் எஸ். செல்வபார்வதி தலைமை வகித்து இனிப்பு வழங்கினார்.

    அரசுநூலகத்தில் நடைபெறற விழாவில் வாசகர் வட்டத் தலைவர் இஸ்ரவேல் கொடியேற்றினார். நூலகர் இரா. சந்திரசேகர், நூலகப் புரவலர்கள் ஈஸ்வர்சுப்பையா, வா. ராஜலட்சுமி, மகா. பால்துரை, மு. சுயம்புலிங்கம், நூலகர் பெ. கிருட்டினமூர்த்தி பங்கேற்றனர்.

    உடன்குடி: உடன்குடி நைனாப்பிள்ளை தெரு ஊராட்சி ஒன்றிய பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு கல்விக்குழுத் தலைவர் அஜீஸ் தலைமை வகித்தார். பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவி வளர்மதி முன்னிலை வகித்தார். தலைமையாசிரியர் சுரேஷ்குமார் கொடியேற்றினார். பேரூராட்சி உறுப்பினர் சலீம் பேசினார். கல்விக்குழு உறுப்பினர்கள் கா. ஜெயக்குமார், மெகர்ஜான்பீவி, சேக்மகபூப் பங்கேற்றனர். ஓவிய ஆசிரியர் சுப்பிரமணியன் நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai