Enable Javscript for better performance
இலவச பொது மருத்துவ முகாம்- Dinamani

சுடச்சுட

    

    கோவில்பட்டி தாமஸ் நகர் நலத் தொண்டு மாணவர் இயக்கம், கமலா மருத்துவமனை இணைந்து தமிழ் பாப்திஸ்து தொடக்கப் பள்ளி வளாகத்தில் இலவச பொது மருத்துவ முகாமை நடத்தின.

    முத்துக்கனி தலைமை வகித்தார். கோவில்பட்டி டிஎஸ்பி ராஜேந்திரன் முகாமைத் தொடக்கிவைத்தார். மருத்துவர்கள் கமலாமாரியம்மாள், சுப்புராஜ், சங்கர்சீனிவாசன், அருள்குமார், சுமதிஜெயராம் ஆகியோர் கொண்ட மருத்துவக் குழுவினர் 282 பேருக்கு சிகிச்சை அளித்தனர்.

    மந்தித்தோப்பு கிராம நிர்வாக அதிகாரி மீனாம்பிகை, அப்துல்கலாம் ரத்த தான கழகத் தலைவர் ராஜேந்திரன், தொழிலதிபர்கள் ரவிசந்திரன், டேனியல், அழகுராஜ், ஒன்றிய கவுன்சிலர் நாகராஜன், கமலா மருத்துவமனையைச் சேர்ந்த சம்பத்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai