Enable Javscript for better performance
உதவி தொடக்கக் கல்வி அலுவலகத் திறப்பு விழா- Dinamani

சுடச்சுட

    

    உதவி தொடக்கக் கல்வி அலுவலகத் திறப்பு விழா

    By சாத்தான்குளம்,  |   Published on : 18th August 2013 12:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சாத்தான்குளம் எம்எல்ஏ அலுவலகத்தில் உதவி தொடக்கக் கல்வி அலுவலகத் திறப்பு விழா நடைபெற்றது.

    திருச்செந்தூர் கோட்டாட்சியர் கொங்கன் தலைமை வகித்தார். சாத்தான்குளம் ஒன்றியத் தலைவர் ஒய்.எஸ். சுரேஷ்குமார், முன்னாள் எம்எல்ஏ நீலமேகவர்ணம் முன்னிலை வகித்தனர்.

    உதவி தொடக்கக் கல்வி அலுவலகத்தை அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் திறந்துவைத்துப் பேசினார்.

    தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டாரத் தலைவர் ஆர். ராஜ்மோகன், செயலர் ஜி. தங்கராஜ், பொருளாளர் ஜி. ஆரோக்கியராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் செ. அருள்ராஜ், ஒன்றிய அதிமுக செயலர் ஆர்.எஸ்.எஸ். ராஜ்மோகன், புதுக்குளம் ஊராட்சித் தலைவர் ச. பாலமேனன், ஆசிரியர் சிக்கன நாணய கூட்டுறவு சங்கத் தலைவர் மா. ரெக்ஸ், ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டாரத் தலைவர் ஸ்டீபன்தாஸ், செயலர் சார்லஸ், அனைந்திய இந்திய ஆசிரியர் பேரவை மாவட்டச் செயலர் சௌ. சாந்தகுமார், முன்னாள் ஒன்றிய துணைத் தலைவர் பொன்முருகேசன், பள்ளக்குறிச்சி ஊராட்சித் தலைவர் திவாகரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    உதவி தொடக்கக் கல்வி அலுவலர் எம். ஜெயபாலன் வரவேற்றார். கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் பு. முத்துப்பிள்ளை நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai