Enable Javscript for better performance
கோவில்பட்டி அணி வெற்றி- Dinamani

சுடச்சுட

    

    கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் மண்டலம் 18-க்கு உள்பட்ட பொறியியல் கல்லூரிகளுக்கு இடையேயான ஆடவர் கால்பந்து போட்டி 2 நாள்கள் நடைபெற்றது.

    கல்லூரி விளையாட்டு மைதானத்தில் இப் போட்டிகள் 2 நாள்கள் நடைபெற்றன. முதல் நாள் போட்டியை கல்லூரி இயக்குநர் சொக்கலிங்கம் தொடக்கி வைத்தார். கல்லூரி முதல்வர் சுப்புராஜ் முன்னிலை வகித்தார். 27 அணிகள் பங்கேற்றன.  இறுதிப் போட்டியில், கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரி அணியும், மருதகுளம் பொறியியல் கல்லூரி அணியும் மோதின. அதில், நேஷனல் பொறியியல் கல்லூரி அணி வென்றது. திருச்சியில் நடைபெறும் மண்டலங்களுக்கு இடையேயான போட்டியில் பங்கு பெற அந்த அணி தகுதி பெற்றது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai