Enable Javscript for better performance
கோவில்பட்டி பள்ளிகளில் அறிவியல் கண்காட்சி- Dinamani

சுடச்சுட

    

    கோவில்பட்டி பள்ளிகளில் அறிவியல் கண்காட்சி

    By கோவில்பட்டி,  |   Published on : 18th August 2013 12:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவில்பட்டி வ.உ.சி. அரசு மேல்நிலைப் பள்ளி, காமராஜ் மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி, எவரெஸ்ட் மாரியப்ப நாடார் மேல்நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.

    வ.உ.சி. அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற கண்காட்சியை பள்ளித் தலைமையாசிரியர் சீனிவாசன் திறந்துவைத்தார்.

    சீலிங் பேன் இயங்கும்போது அதிலிருந்து மின்சாரம் தயாரித்தல் உள்பட 50-க்கும் மேற்பட்ட படைப்புகள் இடம்பெற்றிருந்தன.

    காமராஜ் மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற கண்காட்சிக்கு நாடார் உறவின்முறை சங்கத் தலைவர் பழனிசெல்வம் தலைமை வகித்தார். கண்காட்சியை மெட்ரிகுலேஷன் பள்ளி ஆய்வாளர் அர்ஜுனன் திறந்துவைத்துப் பார்வையிட்டார். 500-க்கும் மேற்பட்ட மாணவர்-மாணவிகளின் படைப்புகள் இடம்பெற்றிருந்தன.

    நாடார் உறவின்முறை சங்கச் செயலர் ராஜகுரு, பொருளாளர் சுரேஷ்குமார், பத்திரகாளியம்மன் கோவில் தர்மகர்த்தா தங்கக்காளிராஜா, பள்ளிச் செயலர்கள் கணேசப்பாண்டியன் (நாடார் நடுநிலைப் பள்ளி), பாலசுப்பிரமணியன் (காமராஜ் பிரைமரி மற்றும் நர்சரி பள்ளி), காளிராஜன் (காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி), பள்ளிக் குழு உறுப்பினர்கள் நீதிராஜன், முருகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    எவரெஸ்ட் மாரியப்ப நாடார் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற கண்காட்சி திறப்பு விழாவுக்கு பள்ளி நிறுவனர் எவரெஸ்ட் எம். ராமச்சந்திரன் தலைமை வகித்தார். கண்காட்சியை பள்ளிக் குழு உறுப்பினர் வீரஅரசு திறந்து வைத்துப் பார்வையிட்டார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai