Enable Javscript for better performance
சந்தையடியூர் நாராயண சுவாமி கோவிலில் பால்முறை திருவிழா- Dinamani

சுடச்சுட

    

    சந்தையடியூர் நாராயண சுவாமி கோவிலில் பால்முறை திருவிழா

    By உடன்குடி,  |   Published on : 18th August 2013 12:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உடன்குடி சந்தையடியூர் ஸ்ரீமன் நாராயண சுவாமி கோவிலில் ஆடி மாத பால்முறை திருவிழா 4 நாள்கள் நடைபெற்றது.

    இதையொட்டி புதன்கிழமை தர்மம் எடுத்தல், பகலில் உகப்படிப்பு, இரவில் குதிரை வாகனத்தில் அய்யா வீதியுலா வருதல், வியாழக்கிழமை காலையில் சப்பரம் கோவிலை அடைந்தவுடன் அன்னதர்மம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாலையில் திருவிளக்கு வழிபாடு, இரவில் கருடா வாகனத்தில் அய்யா வீதியுலா வருதல் நடைபெற்றது.

    வெள்ளிக்கிழமை காலை அன்னதர்மம், பகலில் உகப்படிப்பு, மாலையில் சந்தனக்குடம் எடுத்தல், இரவில் ஹனுமன் வாகனத்தில் அய்யா நாராயணர் வீதியுலா வருதல் நடைபெற்றது. நிகழ்ச்சிகளில் ஊர் மக்கள் உள்பட திரளானோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகக் குழுவினர் செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai