Enable Javscript for better performance
சிங்கிலிப்பட்டி, விளாத்திகுளம் காளைகள் வெற்றி- Dinamani

சுடச்சுட

    

    சிங்கிலிப்பட்டி, விளாத்திகுளம் காளைகள் வெற்றி

    By கோவில்பட்டி  |   Published on : 18th August 2013 12:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவில்பட்டி அருகே சனிக்கிழமை நடைபெற்ற மாட்டு வண்டிப் போட்டியில் சிங்கிலிப்பட்டி, விளாத்திகுளம் காளைகள் முதல் பரிசு வென்றன.

     ஈராச்சி ஊராட்சி, கசவன்குன்று அருள்மிகு முத்தாலம்மன் கோவில் முளைப்பாரி திருவிழாவை முன்னிட்டு, பெரிய மாட்டு வண்டிப் போட்டி, சின்ன மாட்டு வண்டிப் போட்டிகள் நடைபெற்றன.

     10 மைல் தொலைவைக் கடக்கும் பெரிய மாட்டு வண்டிப் போட்டியில் 10 மாட்டு வண்டிகள் பங்கேற்றன. அதில், சிங்கிலிப்பட்டி பெருமாள்சாமி காளைகள் முதல் பரிசாக ரூ. 12,001, குலசைநல்லூரைச் சேர்ந்த காளைகள் 2-ம் பரிசாக ரூ. 11,001, வல்லநாட்டைச் சேர்ந்த காளைகள் 3-ம் பரிசாக ரூ. 10,001 பெற்றன.   6 மைல் தொலைவைக் கடக்கும் சிறிய மாட்டு வண்டிப் போட்டியில் 17  மாட்டு வண்டிகள் பங்கேற்றன. இதில், விளாத்திகுளம் சித்திரைப் பாண்டி காளைகள் முதல் பரிசாக ரூ. 9,001, புதூர்பாண்டியாபுரம் காளைகள் 2-ம் பரிசாக ரூ. 8,001, திருநெல்வேலி மாவட்டம் முத்தூர் மாடசாமிப்பாண்டியன் காளைகள் 3-ம் பரிசாக ரூ. 7,001 பெற்றன.

     பெரிய மாட்டு வண்டிப் போட்டியை கோவில்பட்டி தொழிலதிபர் அங்கமுத்து, சிறிய மாட்டு வண்டிப் போட்டியை கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் செல்வராஜ் ஆகியோர் தொடக்கிவைத்தனர். ஏற்பாடுகளை கசவன்குன்று கிராம மக்கள் செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai