Enable Javscript for better performance
சிங்கி இறால் கொழுக்க வைத்தல் இலவசப் பயிற்சியில் சேர அழைப்பு- Dinamani

சுடச்சுட

    

    சிங்கி இறால் கொழுக்க வைத்தல் இலவசப் பயிற்சியில் சேர அழைப்பு

    By தூத்துக்குடி,  |   Published on : 18th August 2013 12:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தூத்துக்குடி தருவைகுளம் கடல்சார் தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க மையத்தில், இம் மாதம் 27-ம் தேதி நடைபெறவுள்ள சிங்கி இறால் கொழுக்க வைத்தல் பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து தருவைகுளம் கடல்சார் தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க மைய அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தின் அங்கமான மீன்வள ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க இயக்ககத்தின் கீழ் தூத்துக்குடி தருவைகுளத்தில் இயங்கி வரும் கடல்சார் தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க மையத்தில் இம் மாதம் 27-ம் தேதி சிங்கி இறால் கொழுக்க வைத்தல் குறித்த ஒருநாள் இலவச பயிற்சி வழங்கப்பட உள்ளது.

    இப் பயிற்சியில் வளர்ப்புக்கேற்ற சிங்கி இறால் வகைகள், சிங்கி இறால்களில் ஆண் பெண் அடையாளம் கண்டறிதல், சிங்கி இறாலின் இனவிருத்தி, வளர்ச்சி, கொழுக்க வைக்க சிங்கி இறால் தேர்வு செய்யும் முறை, கிடைக்கும் காலங்கள் மற்றும் இடங்கள், சிங்கி இறால் வளர்ப்பு முறைகள், அறுவடை முறைகள், சிங்கி இறால் வளர்ப்பு செலவின வருமான கணக்கீடு குறித்த தொழில்நுட்ப வகுப்பு மற்றும் செயல்விளக்க பயிற்சிகள் அளிக்கப்படும்.

    பங்கேற்க விருப்பமுள்ள தொழில் முனைவோர் மற்றும் இதர நபர்கள் இம் மாதம் 26-ம் தேதி மாலை 5.45 மணிக்குள் தொலைபேசி மூலமோ, நேரடியாகவோ தொடர்பு கொண்டு பெயர்ப் பதிவு செய்யலாம்.

    பதிவுசெய்ய விரும்புவோர் பேராசிரியர் மற்றும் தலைவர், கடல்சார் தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க மையம், தருவைக்குளம், தூத்துக்குடி என்ற முகவரியிலும் 0461-2910336, 2340554 என்ற தொலைபேசி எண்களிலும், 94422 88850 என்ற செல்போன் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai