Enable Javscript for better performance
சுதந்திர தினத்தில் விடுமுறை வழங்காத 50 நிறுவனங்கள் மீது நடவடிக்கை- Dinamani

சுடச்சுட

    

    சுதந்திர தினத்தில் விடுமுறை வழங்காத 50 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

    By தூத்துக்குடி,  |   Published on : 18th August 2013 12:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தூத்துக்குடி மாவட்டத்தில் சுதந்திர தினத்தில், தொழிலாளர்களுக்கு விடுமுறை வழங்காத 50 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட தொழிலாளர் ஆய்வாளர் (பொறுப்பு)  அ. முகமது அப்துல் காதர் சுபைர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

     சென்னையில் உள்ள தொழிலாளர் ஆணையர் சந்திரமோகன் ஆணைப்படியும், திருநெல்வேலி தொழிலாளர் துணை ஆணையர் ஹேமலதா அறிவுரைப்படியும் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் சுதந்திர தினத்தில் தொழிலாளர் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

    தேசிய பண்டிகை விடுமுறை சட்டத்தின் கீழ் கடை நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களிóல் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சுதந்திர தினத்தில் தேசிய பண்டிகை விடுமுறை சட்டத்தின் கீழ் தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை வழங்க வேண்டும். அல்லது இரட்டிப்பு ஊதியம் அடிப்படையில் உரிய முன் அனுமதியுடன் தொழிலாளர்களைப் பணிக்கு அமர்த்த வேண்டும்.

     இந்தச் சட்டப்படி விடுமுறை வழங்காத, முன் அனுமதி பெறாத 21 கடை நிறுவனங்கள், 21 உணவு நிறுவனங்கள், 8 மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் என 50 நிறுவனங்கள் மீது வழக்குத் தொடரப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai