Enable Javscript for better performance
சுவாமி விவேகானந்தர் 150-வது ஜயந்தி விழா- Dinamani

சுடச்சுட

    

    உடன்குடி அருகே கொட்டங்காடு முத்துக்கிருஷ்ணபுரம் முத்தாரம்மன் கோவிலில், பாரத மாதா சேவா சங்கம் சார்பில் சுவாமி விவேகானந்தரின் 150-வது ஜயந்தி விழா கொண்டாடப்பட்டது. நிழ்ச்சிக்கு பாலகண்ணன் தலைமை வகித்தார். இந்து மக்கள் கட்சி மாவட்ட இளைஞரணிச் செயலர் பாலன், சுதன் முன்னிலை வகித்தனர்.

    பாரத மாதா சேவா சங்க நிறுவனர் சேர்மலிங்கம் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தார். மாறுவேடம், ஓவியம், விநாடி-வினா, கட்டுரைப் போட்டிகள் நடத்தப்பட்டு, வென்றோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    பரிசுகளை தமிழ்நாடு நுகர்வோர் பேரவை மாநில தலைவர் ஏ.வி.பி. மோகனசுந்தரம், ஊர்ப் பிரமுகர்கள் வழங்கினர். கோவில் வளாகம்,

    தெருக்களில் மரக்கன்றுகள் நடப்பட்டன. பாரதமாதா சேவா சங்கப் பொறுப்பாளார் லிங்கராஜா நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai