Enable Javscript for better performance
திருச்செந்தூரில் நலத்திட்ட உதவி அளிப்பு- Dinamani

சுடச்சுட

    

    திருச்செந்தூரில் நலத்திட்ட உதவி அளிப்பு

    By திருச்செந்தூர்,  |   Published on : 18th August 2013 12:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தூத்துக்குடி மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப் பாசறை சார்பில் அக் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் பிறந்த நாள் விழா, கருத்தரங்கம், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திருச்செந்தூரில் நடைபெற்றது.

    இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப் பாசறை மாவட்டச் செயலர் முரசு தமிழப்பன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர்கள் தமிழ்த் தேசிய விடுதலைப் பேரவை சி.பா. பாரிவள்ளல், மகளிர் விடுதலை இயக்கம் சா.சு. இந்திரா, முற்போக்கு மாணவர் கழகம் ஜெ. தர்மராஜ், கருத்தியல் பரப்பு மையம் இர.பு. தமிழ்க்குட்டி, மாவட்ட துணைச் செயலர்கள் இல. பேச்சிமுத்து, யாசர் அராபத், சமுத்திரபாண்டியன் முன்னிலை வகித்தனர்.

    முற்போக்கு மாணவர் கழக மாநில துணைச் செயலர் வி. இன்குலாப், அரசு ஊழியர் ஐக்கியப் பேரவை மாநில துணைச் செயலர் சா. மலைச்சாமி, ஓவியர் அணி மாநில துணைச் செயலர் முதல்வன், மாநில துணைச் செயலர்கள் மகளிர் விடுதலை இயக்கம் பிரிசில்லா ஜெயக்குமார், தொண்டரணி எழிலமுதன், தொழிற்சங்கம் அருள்ராஜ், மாவட்டப் பொறுப்பாளர்கள் உதயகுமார், அல்அமீன், புரட்சியாளன், விஜயா, கன்னிமுத்து, சேதுராமன், செல்வக்குமார், செல்வராஜ், தமிழ்க்குமரன், ஆட்டோ கணேசன், வேந்தன், திருச்செந்தூர் ஒன்றிய துணைச் செயலர் மு. தமிழ்ப்பரிதி, உதயா பங்கேற்றனர்.

    திருமா ஆட்டோ ஸ்டான்ட் சார்பில் மாற்றுத்திறனாளிக்கு மூன்று சக்கர சைக்கிள் வழங்கப்பட்டது. நகர அமைப்பாளர் பே. சின்னத்துரை வரவேற்றார். சாத்தான்குளம் இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப் பாசறை ஒன்றியச் செயலர் தாமரை. முத்துவேல் நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai