Enable Javscript for better performance
தூத்துக்குடி பெண்கள் கல்லூரியில் மகளிர் கல்வி மையம் தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    தூத்துக்குடி பெண்கள் கல்லூரியில் மகளிர் கல்வி மையம் தொடக்கம்

    By தூத்துக்குடி,  |   Published on : 18th August 2013 12:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தூத்துக்குடி புனித மரியன்னை பெண்கள் கல்லூரியில் மகளிர் கல்வி மையம் மற்றும் சம வாய்ப்பு மையங்களின் தொடக்க விழா, சுதந்திர தின விழா நடைபெற்றது.

    கல்லூரி முதல்வர் டெக்லா தலைமை வகித்தார். தாளாளர் லூசியா ரோஸ் முன்னிலை வகித்தார். குருஸ்புரம் பங்குத்தந்தை பிரதீப், மையத்தைத் தொடக்கிவைத்தார்.

    இம் மையம் மூலம் மகளிர் குறித்த ஆய்வுகள் நடத்தப்படும். மகளிர் குறித்த தகவல்கள் சேகரித்து பாதுகாப்பாக வைக்கப்படும். மாணவிகளின் கணினி பயன்பாட்டுக்கான துணை மையமாக இந்த சம வாய்ப்பு மையம் செயல்படும் என முதல்வர் டெக்லா தெரிவித்தார்.

    தொடர்ந்து, ஏபிசி மகாலட்சுமி மகளிர் கல்லூரி வரலாற்றுத் துறை இணைப் பேராசிரியர் சாந்தகுமாரி, தேசியக் கொடியேற்றிப் பேசினார். விழாவில் திரளானோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai