Enable Javscript for better performance
தூத்துக்குடி மாவட்டத்தில் 6,279 பேர் எழுதினர்- Dinamani

சுடச்சுட

    

    தூத்துக்குடி மாவட்டத்தில் 6,279 பேர் எழுதினர்

    By தூத்துக்குடி  |   Published on : 18th August 2013 12:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தூத்துக்குடி மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாள் தேர்வை 6,279 பேர் எழுதினர்.

    தமிழகம் முழுவதும் இடைநிலை ஆசிரியர்கள் பணிக்கான தகுதித் தேர்வு (தாள்-1) சனிக்கிழமை நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 17 மையங்களில் காலை 10 முதல் பிற்பகல் 1 மணிவரை தேர்வு நடைபெற்றது. கோவில்பட்டி கல்வி மாவட்டத்தில் 2,822 பேர் விண்ணப்பித்திருந்தனர். 43 பேர் தேர்வு எழுதவில்லை. இதனால்,  8 மையங்களில் 2,779 பேர் தேர்வெழுதினர்.

    தூத்துக்குடி கல்வி மாவட்டத்தில் 3,580 பேர் விண்ணப்பித்திருந்தனர். 80 பேர் தேர்வில் பங்கேற்றவில்லை. இதனால், 9 மையங்களில் 3,500 பேர் தேர்வெழுதினர்.

    மாவட்டம் முழுவதும் 17 மையங்களில் 6,279 பேர் ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாள் தேர்வு எழுதினர்.  தூத்துக்குடி தூய மரியன்னை ஆண்கள் மேல்நிலைப் மையத்தில் நடைபெற்ற தேர்வை ஆட்சியர் எம். ரவிகுமார் பார்வையிட்டார். பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநர் கருப்பசாமி கோவில்பட்டி பகுதிகளில் உள்ள தேர்வு மையங்களைப் பார்வையிட்டார்.

    இந்நிலையில், பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு (2-ம் தாள்) ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இத் தேர்வை கோவில்பட்டி கல்வி மாவட்டத்தில் 8 மையங்களில் 2,853 பேரும், தூத்துக்குடி கல்வி மாவட்டத்தில் 17 கல்வி மையங்களில் 6,172 பேரும் என மொத்தம் 9,025 பேர் எழுதுகின்றனர்.

    ஆசிரியர் தகுதித் தேர்வையொட்டி மாவட்டம் முழுவதும் உள்ள தேர்வு மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai