Enable Javscript for better performance
நலத் திட்ட உதவி அளிப்பு - Dinamani

சுடச்சுட

    

    மனித நேய உதவும் கரங்கள் 19-ம்

    ஆண்டு விழாவையொட்டி, நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா, அரசுப் பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்-மாணவிகளுக்கு பரிசளிப்பு, சிறந்த சேவை செய்த அரசு, பொதுத் துறை ஊழியர்களுக்கு பாராட்டு விழா கோவில்பட்டியில் நடைபெற்றது.

    கோட்டாட்சியர் கதிரேசன் தலைமை வகித்தார். கோவில்பட்டி எம்எல்ஏ கடம்பூர் செ. ராஜு, மாவட்ட கூடுதல் காவல் துறை கண்காணிப்பாளர் கண்ணன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்று, 10, 12-ம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில் பள்ளி அளவில் முதல் 3 இடங்களைப் பிடித்த கோவில்பட்டி நகர பள்ளி மாணவர்- மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    மேலும், ஏழைப் பெண்களுக்கு தையல் மிஷின்கள், பள்ளி மாணவிக்கு செயற்கைக் கை, காது கேட்கும் கருவிகள் உள்ளிட்ட பல்வேறு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து, சிறந்த சேவை செய்த அரசு ஊழியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    கோவில்பட்டி காவல் துறை துணை கண்காணிப்பாளர் ராஜேந்திரன், கோவில்பட்டி கல்வி மாவட்ட அதிகாரி ராஜமாணிக்கம், தொழிலதிபர்கள் ஞானதுரை, டக்லஸ், மருத்துவர்கள் மதனகோபால், பிரபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மனித நேய உதவும் கரங்கள் தலைவர் இந்தியன்பிரகாஷ் வரவேற்றார். செயலர் கண்ணன் நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai