Enable Javscript for better performance
நாசரேத்தில் அபிஷேகப் பெருவிழா - Dinamani

சுடச்சுட

    

    நாசரேத் காமா ஊழியம் சார்பில் 13-வது அபிஷேகப் பெருவிழா நாசரேத் கதீட்ரல் மைதானத்தில் 3 நாள்கள் நடைபெற்றது.

    மதுரை டென்சிங் டேனியல் பிரசங்கம் செய்தார். மதுரை இயேசு மறவார் ஊழிய நிறுவனர் டென்சிங் டேனியல் அபிஷேக செய்தி வழங்கினார். 3 நாள் கூட்டத்துக்கும் நாசரேத் தூயயோவான் கதீட்ரல் தலைமை பாதிரியார் எஸ். மாணிக்கம் தலைமை வகித்தார். உதவி குருக்கள் மோசஸ், பிரின்ஸ், நாசரேத் காமா மினிஸ் ட்ரிஸ் ஸ்தாபகர் பி.ஆர். சாமுவேல், தலைவர் பி. புஷ்பராஜ், துணைத் தலைவர் டி. பில்லிகிரஹாம், செயலர் ஏ. ஜெபசிங், பொருளாளர் ஜி. ராஜேஷ், ஒருங்கிணைப்பாளர் றி. குரூஸ் மாசிலாமணி, கொயர் மாஸ்டர் பி. குட்டி ஜேஸ்கர் முன்னிலை வகித்தனர்.  முதல்நாள் கூட்டத்தை தூத்துக்குடி-நாசரேத் திருமண்டில பிரதமப் பேராயரின் பிரதிநிதி ஜெசுசகாயம் ஜெபித்து தொடக்கிவைத்தார். 2-ம் நாள் கூட்டத்தை உதவி குரு பிரின்ஸ்ஜெபித்து தொடக்கி வைத்தார்.  நிறைவு நாள் கூட்டத்தை திருநெல்வேலி திருமண்டில முன்னாள் பேராயர் ஜெயபால் டேவிட் ஜெபித்து தொடக்கிவைத்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai