Enable Javscript for better performance
பன்னம்பாறை பள்ளியில் வகுப்பறைக் கட்டடம் திறப்பு- Dinamani

சுடச்சுட

    

    பன்னம்பாறை பள்ளியில் வகுப்பறைக் கட்டடம் திறப்பு

    By சாத்தான்குளம்,  |   Published on : 18th August 2013 12:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சாத்தான்குளம் அருகேயுள்ள பன்னம்பாறை ஆவே மரியா மெட்ரிகுலேஷன் பள்ளியில் சுதந்திர தின விழாவையொட்டி புதிய  வகுப்பறை கட்டடத் திறப்பு விழா நடைபெற்றது.

    தாளாளர் பீட்டர்ராஜ் தலைமை வகித்தார். பன்னம்பாறை ஊராட்சித் தலைவர் ராதிகாபெருமாள், பெற்றோர்-ஆசிரியர் கழகத் தலைவர் ஜெயசிங் முன்னிலை வகித்தனர். அருள்தந்தை பீட்டர்ராஜா நிகழ்ச்சியைத் தொடக்கிவைத்தார். மாணவர்- மாணவிகளின் அணிவகுப்பு நடைபெற்றது. சிறப்பு உதவி ஆய்வாளர்  மதிபாலன் தேசியக் கொடியேற்றினார்.

    உதவி ஆய்வாளர் ஸ்டீபன் வகுப்பறைக் கட்டடத்தை திறந்துவைத்தார்.  மாணவி யு. நாகலட்சுமி, மாணவர்கள் சத்தீஸ்வரன், சிவராமகிருஷ்ணன் பேசினர். இத்தாலி நாட்டைச் சேர்ந்த செல்வி சாரா உள்பட பலர் பங்கேற்றனர். ஆசிரியை டென்சி  வரவேற்றார். ஆசிரியை ராஜம்மாள் நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai