Enable Javscript for better performance
மாணவர் சங்க ஊர்திப் பயணத்துக்கு கோவில்பட்டியில் வரவேற்பு- Dinamani

சுடச்சுட

    

    மாணவர் சங்க ஊர்திப் பயணத்துக்கு கோவில்பட்டியில் வரவேற்பு

    By கோவில்பட்டி  |   Published on : 18th August 2013 12:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவில்பட்டிக்கு சனிக்கிழமை வந்த இந்திய மாணவர் சங்க ஊர்திப் பயணத்துக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இந்திய மாணவர் சங்க மாநில மாநாடு சென்னை ராயப்பேட்டையில் இம் மாதம் 22 முதல் 3 நாள்கள் நடைபெறவுள்ளது. மாநாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், விக்கிரமசிங்கபுரத்தில் மாநில துணைச் செயலர் மாரியப்பன் தலைமையில், தியாகி குமார் ஜோதி ஊர்திப் பயணம் புறப்பட்டது.

    கோவில்பட்டிக்கு சனிக்கிழமை வந்த ஊர்திப் பயணத்துக்கு பயணியர் விடுதி முன் வரவேற்பு அளிக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்ட இந்திய மாணவர் சங்கச் செயலர் சுரேஷ்பாண்டி, நிர்வாகிகள் உமாசங்கர், விஜயகுமார், ஸ்டீபன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பின்னர் இந்த ஊர்திப் பயணம், விருதுநகர் மாவட்டம் சாத்தூருக்கு புறப்பட்டுச் சென்றது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai