Enable Javscript for better performance
முத்துக்கிருஷ்ணாபுரத்தில் கிராமசபைக் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    முத்துக்கிருஷ்ணாபுரத்தில் கிராமசபைக் கூட்டம்

    By சாத்தான்குளம்  |   Published on : 18th August 2013 12:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சாத்தான்குளம் ஒன்றியம் சுப்பராயபுரம் ஊராட்சிக்கு உள்பட்ட முத்துக்கிருஷ்ணாபுரத்தில் சிறப்பு கிராம

    சபைக் கூட்டம் நடைபெற்றது.

    ஊராட்சித் தலைவர் சுயம்புதுரை தலைமை வகித்தார். ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் முகம்மது இப்ராஹிம், ஆசிரியர் பயிற்றுநர் சகுந்தலா, ஊராட்சித் துணைத் தலைவர் தங்கலட்சுமி முன்னிலை வகித்தனர்.

    வட்டாட்சியர் பொ. மிகாவேல் ஞானதீபம் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றார்.

    உடன்குடியிலிருந்து சுப்பராயபுரம், தோப்புவளம், காலன்குடியிருப்பு வழியாக சாத்தான்குளத்துக்கு இயக்கப்பட்டு, 10 ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்ட அரசு பஸ்ûஸ மீண்டும் அதே வழித்தடத்தில் இயக்க வேண்டும்.

    தன்னிறைவு திட்டத்தில் முத்துக்கிருஷ்ணாபுரம், தோப்புவளம், காலன்குடியிருப்பு ஆகிய பள்ளிகளை 50 சதவீத மக்கள் பங்களிப்பில் சீரமைக்க ஆட்சியரிடம் அனுமதி கேட்டும், ஊராட்சிப் பகுதியில் சாலையோரம், தெருக்களில் மரக்கன்றுகள் நடுவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டன. வட்ட வழங்கல் அலுவலர் பேச்சிமுத்து, கிராம நிர்வாக அலுவலர் முருகன், அங்கன்வாடிப் பணியாளர்கள் தங்கத்தாய், செல்வக்கனி, ஊராட்சி உறுப்பினர்கள் கொடிவேல், சக்திவேல், தானியேல், சரஸ்வதி குடிநீர் ஆப்ரேட்டர் மனோகரன், ரேஷன் கடைப் பணியாளர் சந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ஊராட்சிச் செயலர் ஜஸ்டின் நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai