Enable Javscript for better performance
விளாத்திகுளத்தில் தேமுதிக ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடி வடக்கு மாவட்ட தேமுதிக சார்பில் விளாத்திகுளத்தில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    தூத்துக்குடி மாவட்ட கடலோரங்களில் முறைகேடாக தாது மணல் எடுக்கப்பட்டது குறித்து முறையான விசாரணை நடத்த வேண்டும். குற்றச் செயலில் ஈடுபட்டோரைக் கைது செய்ய வேண்டும். சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விளாத்திகுளம் பஸ் நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு தேமுதிக விளாத்திகுளம் ஒன்றியச் செயலர் தங்கச்சாமி தலைமை வகித்தார்.

    வடக்கு மாவட்டச் செயலர் பொன்ராஜ், மாநில பொறியாளரணிச் செயலர் சீனிவாசராகவன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றுப் பேசினர்.

    மாவட்ட அவைத் தலைவர் மருது செண்பகராஜ், மாவட்ட பொருளாளர் உதயக்குமார், தேமுதிக நிர்வாகிகள் திரளானோர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai