Enable Javscript for better performance
ஆக.21-ல் உடன்குடியில் மாற்றுத் திறனாளிகள் முகாம்- Dinamani

சுடச்சுட

    

    ஆக.21-ல் உடன்குடியில் மாற்றுத் திறனாளிகள் முகாம்

    By உடன்குடி  |   Published on : 19th August 2013 03:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் உடன்குடியில் மாற்றுத் திறனாளிகள் விழிப்புணர்வுப் பேரணி மற்றும்  மருத்துவ முகாம் புதன்கிழமை(ஆக.21) நடைபெறுகிறது.

    அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் உடன்குடி வட்டார வள மையம் சார்பில் மாற்றுத் திறனுடைய குழந்தைகளுக்கு அடையாள அட்டை, மருத்துவ உபகரணங்கள் மற்றும் ஆலோசனைகள் வழங்குவதற்கான முகாம் புதன்கிழமை உடன்குடி கிறிஸ்தியாநகரம் டிடிடிஏ தொடக்கப் பள்ளியில் நடைபெறுகிறது.

    இம்முகாமில் 18 வயதுக்குள்பட்ட பார்வைக் குறைபாடு, செவித்திறன், கை, கால், மனவளர்ச்சி குறைபாடுடைய மாற்றுத் திறனாளிகள் கலந்துகொள்ளலாம். இம்முகாமில் கலந்துகொள்பவர்கள் பாஸ்போர்ட் அளவு புகைப்படம்-4, குடும்ப அட்டை நகல்-1 மட்டும் கொண்டு வர வேண்டும்.

    தகுதி உடையவர்களுக்கு தேசிய ஊனமுற்றோருக்கான அடையாள அட்டை, கல்வி உதவித்தொகை படிவம், காலிபர் ஸ்பிளிண்ட், மூன்றுசக்கர சைக்கிள், சக்கர நாற்காலி, கார்னர் சேர், ஊன்றுகோல், மூக்குகண்ணாடி உள்ளிட்ட மருத்துவ கருவிகள் மற்றும் பராமரிப்பு உதவித்தொகை, இலவச அறுவை சிகிச்சை ஆகிய நலத்திட்ட உதவிகள் அளிக்கப்படும்.

    அன்று காலை 10 மணிக்கு இது குறித்த விழிப்புணர்வுப் பேரணியும் நடைபெறுகிறது.

    ஏற்பாடுகளை வட்டார வள மைய மேற்பார்வையாளர் அருணாசலம் மற்றும் அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai