Enable Javscript for better performance
ஈராச்சியில் நாய் கடித்து மான் சாவு- Dinamani

சுடச்சுட

    

    கொப்பம்பட்டி காவல் சரகத்துக்குள்பட்ட ஈராச்சியில் ஞாயிற்றுக்கிழமை நாய் கடித்து மான் இறந்தது.

    குருமலை வனப் பகுதியிலிருந்து தண்ணீருக்காக தவித்த சுமார் 3 வயது மதிக்கத்தக்க பெண் மான், ஈராச்சி ஊருக்குள் வந்தது. இதனைக் கண்ட தெரு நாய்கள் அதனை விரட்டியடித்து, மயானம் அருகே சென்று கொண்டிருந்த மானை கடித்ததாம். இதில் அந்த மான் இறந்தது.  ஞாயிற்றுக்கிழமை காலை இதைக் கண்ட அப்பகுதியினர், உடனடியாக காவல் துறையினர் மற்றும் வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து, வனக் காப்பாளர் குருசாமி, வனக் காவலர் சங்கரலட்சுமி ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று, இறந்து கிடந்த மானைக் கைப்பற்றி, கோவில்பட்டி கால்நடை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai