Enable Javscript for better performance
கோவில்பட்டியில் கஞ்சிக் கலய ஊர்வலம்- Dinamani

சுடச்சுட

    

    கோவில்பட்டி மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தின் சார்பில் ஞாயிற்றுக்கிழமை அக்னிச் சட்டி, முளைப்பாரி மற்றும் 1,008 கஞ்சிக் கலய ஊர்வலம் நடைபெற்றது.

    கோவில்பட்டியில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் ஆடிப்பூர விழா நடைபெற்றது. இதனையொட்டி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன.

    தொடர்ந்து, உலக மக்கள் வளமுடன், நலமுடன் வாழவும், இயற்கை சீற்றங்கள் தனியவும், மழை வேண்டியும் கஞ்சிக் கலயம், முளைப்பாரி, அக்னிச் சட்டியுடன் ஊர்வலம் நடைபெற்றது.

    கோவில் வளாகம் முன்பிருந்து புறப்பட்ட இந்த ஊர்வலத்தை கோவில்பட்டி நகர அதிமுக செயலர் சங்கரபாண்டியன், நகர்மன்ற துணைத் தலைவர் ராமர் ஆகியோர் தொடங்கிவைத்தனர்.

    ஊர்வலம், நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று, மீண்டும் வழிபாட்டு மன்றம் வந்தடைந்தது.

    இதில், திரளான செவ்வாடை தொண்டர்கள் கலந்துகொண்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதில், வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத் தலைவர் ராஜேஷ்கண்ணன், ஓய்வுபெற்ற ஆசிரியர் எல்.எஸ்.மாரியப்பன், சமூக பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியர் ஜெகநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

    ஏற்பாடுகளை மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்ற மாவட்டச் செயலர் அய்யாச்சாமி, கோவில்பட்டி மன்றத் தலைவர் அப்பாசாமி, செயலர் வீரலட்சுமி, பொருளாளர் சுந்தரராமன், மாவட்ட தணிக்கை செயலர் வரதராஜன், மாவட்ட இளைஞரணித் தலைவர் பால்சாமி ஆகியோர் செய்திருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai