Enable Javscript for better performance
சாத்தான்குளத்தில் பள்ளிச் சுவரில் கார் மோதல்: ஓட்டுநர் காயம்- Dinamani

சுடச்சுட

    

    சாத்தான்குளத்தில் பள்ளிச் சுவரில் கார் மோதல்: ஓட்டுநர் காயம்

    By சாத்தான்குளம்  |   Published on : 19th August 2013 03:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சாத்தான்குளத்தில் சனிக்கிழமை, தனியார் பள்ளி சுவரில் கார் மோதியதில்  ஓட்டுநர் காயமடைந்தார்.

    சாத்தான்குளம் அருகேயுள்ள அமுதுண்ணாக்குடியைச் சேர்ந்தவர் அ. யேசுராஜன் (28). கார் ஓட்டுநரான இவர், நெடுங்குளத்தைச் சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் பெஞ்சமினிடம் ஓட்டுநராகப் பணிபுரிந்து வருகிறார்.

    யேசுராஜன் சனிக்கிழமை தனது காரில் சாத்தான்குளம் சென்று டீசல் போட்டுவிட்டு ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தாராம். மேலசாத்தான்குளத்தில் உள்ள தனியார் பள்ளி அருகே, கார் நிலைதடுமாறி அங்குள்ள பள்ளிச் சுவரில் மோதியதாம்.

    இதில் கார் சேதமடைந்தது. யேசுராஜன் பலத்த காயமடைந்தார். அவர் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சாத்தான்குளம் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai