Enable Javscript for better performance
சுவாமி விவேகானந்தர் படம் வீடு வீடாக விநியோகம் - Dinamani

சுடச்சுட

    

    சுவாமி விவேகானந்தர் படம் வீடு வீடாக விநியோகம்

    By ஆறுமுகனேரி  |   Published on : 19th August 2013 03:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆறுமுகனேரியில் சுவாமி விவேகானந்தர் திரு உருவப்படம் வீடு வீடாக விநியோகப்பட்டு வருகிறது.

    சுவாமி விவேகானந்தர் 150-வது பிறந்த தினவிழா இந்த ஆண்டு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு அமைப்புகள் சார்பில் பல்வேறு வகையில் கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

    சென்னையில் உள்ள சுவாமி விவேகானந்தர் 150-வது பிறந்த தினவிழா ஒருங்கிணைப்பு குழு சார்பில் வீரத்துறவி சுவாமி விவேகானந்தரின் திருஉருவப்படம் அனைத்து வீடுகளிலும் இருக்க வேண்டுமென்ற கருத்தில் அனைத்து ஊர்களில் உள்ள பல்வேறு அமைப்புகளுக்கும் சுவாமி விவேகானந்தர் திரு உருவப்படத்தை அனுப்பி வருகின்றனர்.

    ஆறுமுகனேரியில் உள்ள ஆர்.எஸ்.எஸ். அமைப்பினருக்கும் சுவாமி விவேகானந்தர் திரு உருவப்படம் அனுப்பப்பட்டுள்ளது. அவற்றை திருச்செந்தூர் ஒன்றிய பொறுப்பாளர்கள் வெ.பழனிராஜ், ம.சிவராமன் மற்றும் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் வீடுவீடாகச் சென்று விநியோகித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai