Enable Javscript for better performance
திருச்செந்தூரில் பால்குடம் வழிபாடு- Dinamani

சுடச்சுட

    

    :திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோவில் தெருவில் உள்ள செல்வசுந்தர விநாயகர், அன்பிற்பிரியாள், உச்சினிமாகாளி அம்மன் கோவிலில் வெள்ளிக்கிழமை திருமால் பூஜை நடைபெற்றது.

    இக்கோவிலில் திருமால் பூஜையை முன்னிட்டு, வியாழக்கிழமை இரவு விநாயகர் மற்றும் அம்பாளுக்கு மாக்காப்பு தீபாராதனை நடைபெற்றது. வெள்ளிக்கிழமை காலையில் ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து வழிபட்டனர். தொடர்ந்து அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. மாலையில் பெண்கள் பொங்கலிட்டனர். இரவு சிறப்பு தீபாராதனை மற்றும் படைப்பு தீபாராதனை நடைபெற்றது. ஏற்பாடுகளை வாணியர் சங்க நிர்வாகக் குழுவினர் செய்திருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai