Enable Javscript for better performance
நாலுமாவடியில் வாலிபர் கொண்டாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    நாசரேத் அருகேயுள்ள நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழியத்தின் சார்பில் நாலுமாவடி தேவனுடையவீடு, இயேசு விடுவிக்கிறார் ஊழியக் கூடாரத்தில் வாலிபர் கொண்டாட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் மோகன்.சி. லாசரஸ், உடன் ஊழியர் ஏ.அப்பாத்துரை ஆகியோர் தேவசெய்தி கொடுத்து சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.

    இந்தக் கொண்டாட்டத்தில் தமிழகம் முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான வாலிபர்கள், வாலிப பெண்கள் கலந்து கொண்டனர்.

    ஏற்பாடுகளை இயேசு விடுவிக்கிறார் ஊழிய பொதுமேலாளர் செல்வக்குமார் தலைமையில் ஊழியர்கள் செய்திருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai