Enable Javscript for better performance
நிலத்தடி நீரை உறிஞ்சி வறட்சிக்கு வித்திடும் கருவேல மரங்கள்!- Dinamani

சுடச்சுட

    

    நிலத்தடி நீரை உறிஞ்சி வறட்சிக்கு வித்திடும் கருவேல மரங்கள்!

    By ஸ்ரீவைகுண்டம்,  |   Published on : 19th August 2013 03:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தூத்துக்குடி மாவட்டத்தில், நீர்நிலைகளில் கருவேல மரங்களின் ஆக்கிரமிப்பு அதிகரித்து வருவதால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து தண்ணீர்த் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    பயிர்களுக்கு வேலியாகவும், சமையலுக்கு விறகாகவும் பயன்படும் என்ற நம்பிக்கையில் இந்தியாவுக்குக் கொண்டுவரப்பட்ட சீமைக் கருவேல மரங்கள் இன்று தமிழகம் முழுவதிலும் உள்ள நீர் நிலைகளையும், நிலங்களையும் ஆக்கிரமித்து வருகின்றன.

    எந்த வறட்சியிலும் வளரக்கூடிய தன்மை சீமைக் கருவேல மரங்களுக்கு உண்டு என்பதால் மழை இல்லாமல் போனாலும் நிலத்தடி நீரை உறிஞ்சி பசுமையாக காட்சியளிக்கும். மேலும் மழைநீரை உறிஞ்சி நிலத்தடிக்குச் செல்வதையும் தடைசெய்கிறது.

    ஆறு, குளங்களுக்கு நீர்வரத்து அதிகரிக்கும்போது நீருடன் பழைய துணிகள், மக்காத குப்பை பொருள்கள் இந்த மரங்களில் தங்கி நீர்வரத்தை தடுக்கும். பின் மண் தேங்கி மேடாகி ஆறு, குளங்களை ஆக்கிரமித்துவிடுகின்றன.

    கருவேல மரங்கள் ஒருபுறம் ஆறு, குளங்களை ஆக்கிரமித்து வரும் நிலையில் ஆகாய தாமரை என்றழைக்கப்படும் அமலைச் செடிகளும் நீர் நிலைகளில் அதிகரித்து வருவதால் இனிவரும் காலக்கட்டங்களில் குடிநீர்த் தட்டுப்பாடும் விவசாயத்துக்குத் தேவையான நீர் கிடைக்காமல் விளைநிலங்கள் தரிசு நிலங்களாக மாறி வரும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

    தாமிரவருணி ஆற்றின் கடைசி அணைக்கட்டான ஸ்ரீவைகுண்டம் அணையின் ஒருபுறம் அமலைச் செடிகளும், மறுபுறம் கருவேல மரங்களும் ஆற்றின் நீரோட்டத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தி வருகின்றன. இதனால் நிலத்தடி நீர்மட்டமும் குறைந்து வருகிறது.

    ஸ்ரீவைகுண்டம் அணைப் பகுதி தூர்வாரப்படாததால் மணல் மேடுகளும் அமலைச் செடிகளும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன.

    எனவே, வருங்காலங்களில் தண்ணீர்ப் பற்றாக்குறையைத் தடுக்க தாமிரவருணி உள்ளிட்ட நீர் நிலைகளிலுள்ள அமலைச் செடிகள், கருவேலமரங்கள் மற்றும் ஆக்கிரமிப்புகளை நிரந்தரமாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமுக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai