Enable Javscript for better performance
பன்னம்பாறை ஊராட்சியில் கிராமசபைக் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    பன்னம்பாறை ஊராட்சியில் கிராமசபைக் கூட்டம்

    By சாத்தான்குளம்  |   Published on : 19th August 2013 03:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சாத்தான்குளம் ஒன்றியம் பன்னம்பாறை ஊராட்சியில் சிறப்பு கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது.

    ஊராட்சித் தலைவர் ராதிகாபெருமாள் தலைமை வகித்தார். துணைத் தலைவர் க. இசக்கிமுத்து, மன்ற உறுப்பினர்கள் இ. பரமசிவன், வாசுகி முன்னிலை வகித்தனர். ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சிப் பிரிவு) ஜார்ஜ் அந்தோனி மிக்கேல், சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றிய ஆணையர் சங்கரநாராயணன், வட்டார வளர்ச்சி அலுவலர் பாக்கியவதி, ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்துகொண்டனர்.

    கிராம நிர்வாக அலுவலர் மணிகண்டன், பன்னம்பாறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் இம்மானுவேல் ஜோசப் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். கிராம வளர்ச்சி குறித்த பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai