Enable Javscript for better performance
அதிமுக இளைஞர், இளம்பெண்கள் பாசறை  நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    அதிமுக இளைஞர், இளம்பெண்கள் பாசறை  நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

    By  தூத்துக்குடி  |   Published on : 20th August 2013 08:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தூத்துக்குடி மாவட்ட அதிமுக இளைஞர், இளம்பெண்கள் பாசறை நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
     தூத்துக்குடி மாவட்ட அதிமுக இளைஞர், இளம்பெண்கள் பாசறை நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நகராட்சி திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
     கூட்டத்துக்கு, மாவட்ட அவைத் தலைவர் தாமஸ்பாண்டியன் தலைமை வகித்தார். மாநில அமைப்புசாரா ஓட்டுநர் அணி இணைச் செயலர் பெருமாள்சாமி முன்னிலை வகித்தார்.
     கூட்டத்தில், சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட அதிமுக மாவட்டச் செயலரும், சுற்றுலாத் துறை அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் கலந்து கொண்டு பேசுகையில், தூத்துக்குடியில் ஆகஸ்ட் 25-ம் தேதி நடைபெறவுள்ள இளைஞர் இளம்பெண்கள் பாசறை ஆலோசனைக் கூட்டத்தில் ஏராளமானவர்கள் கலந்து கொள்ளவேண்டும் என்றும் நடைபெற இருக்கும் மக்களவைத் தேர்தலில் அனைத்துத் தொகுதிகளிலும் அதிமுகவை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
     கூட்டத்தில், முன்னாள் மத்திய அமைச்சர் கடம்பூர் ஜனார்த்தனம், சட்டப்பேரவை உறுப்பினர்கள் கடம்பூர் செ.ராஜூ, ஜி.வி.மார்க்கண்டேயன், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் எஸ். டேனியல்ராஜ், மாவட்ட விவசாய அணிச் செயலர் அக்ரி பெருமாள், தூத்துக்குடி மாநகர செயலர் ஏசாதுரை, மாவட்ட இளைஞர், இளம்பெண்கள் பாசறை செயலர் துறையூர் கணேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai