Enable Javscript for better performance
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பாராட்டு- Dinamani

சுடச்சுட

    

    வானரமுட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில் 100 சதவீதம் பெற்றதற்கு பாடுபட்ட அப்பள்ளி ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
     வானரமுட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 2012 - 2013-ம் கல்வி ஆண்டில் பிளஸ்2 அரசு பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளதையடுத்து, அப்பள்ளி பெற்றோர் - ஆசிரியர் கழகம் சார்பில் பள்ளி ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
     விழாவில், பெற்றோர் - ஆசிரியர் கழகப் பொருளாளர் ஞானசேகரன், கிராம உதவியாளர் தங்கப்பாண்டியன் ஆகியோர் ஆசிரியர்களைப் பாராட்டி, பொன்னாடை அணிவித்து கெüரவித்தனர். விழாவில், கிராம நிர்வாக அலுவலர் சண்முகப்பிரியா, பெற்றோர்- ஆசிரியர் கழகத் தலைவர் கென்டியாசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பள்ளித் தலைமையாசிரியை சுலோச்சனா நன்றி கூறினார்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai