Enable Javscript for better performance
உடன்குடியில் கந்தூரி விழா- Dinamani

சுடச்சுட

    

    உடன்குடி காலன்குடியிருப்பு சிதம்பர தெரு சங்கைக்குறிய மௌலானா செய்யது காசீம் ஒலியுல்லா(ஒட்டகை சாஹிபு அப்பா)எஹி இப்புனு யூசுபு ரிபாயி பகுதாதி அவர்களின் 164-வது ஆண்டு கந்தூரி விழா 2 தினங்கள் நடைபெற்றது.
     இதையொட்டி ஞாயிற்றுக்கிழமை காலை கொடி ஊர்வலமும், மாலையில் பால்குடம் எடுத்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இரவு மௌலூது நிகழ்ச்சிக்குப்பின் இரவு 11 மணிக்கு மௌலானா மேலப்பாளையம் கவிஞர் செய்யது அலி ரிபாயி தலைமையில் விஷேச ராத்திபு மற்றும் அல்மதத் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. திங்கள்கிழமை காலை பள்ளியில் நேர்ச்சை, காணிக்கை நேர்ச்சை, தெருவரி நேர்ச்சை உணவுகள் வழங்கப்பட்டன. மாலை சிதம்பரத் தெரு அல்மதரஸத்துல் காஸிமிய்யா அரபி பாடசாலை மாணவர், மாணவிகளின் மார்க்கம் குறித்த சொற்பொழிவுகள் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அப்துல்காதர் ஆலீம் உஸ்மானி தலைமை வகித்தார்.
     பின்னர் பல்வேறு துறைகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ,மாணவிகளுக்கு ஜமாத் கமிட்டி தலைவர் ஹாஜி காசிம் பரிசுகள் வழங்கினார். ஏற்பாடுகளை ஜமாத் கமிட்டி தலைவர் ஹாஜி ஏ.எஸ்.காசிம், செயலர் அப்துல்ரசாக் மற்றும் கந்தூரி விழாக் குழுவினர் செய்திருந்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai