Enable Javscript for better performance
காவல் துறை விழிப்புணர்வு துண்டுப் பிரசுரம் விநியோகம்- Dinamani

சுடச்சுட

    

    காவல் துறை விழிப்புணர்வு துண்டுப் பிரசுரம் விநியோகம்

    By  தூத்துக்குடி  |   Published on : 20th August 2013 08:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தூத்துக்குடியில் பலவேறு மோசடித் திட்டங்களை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என்பதை வலியுறுத்தி காவல் துறை சார்பில் விழிப்புணர்வு துண்டுப் பிரசுரம் திங்கள்கிழமை விநியோகிக்கப்பட்டது.
     தூத்துக்குடி மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு ஆய்வாளர் அண்ணாமலை, உதவி-ஆய்வாளர்கள் செல்வி, ராஜன் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை மனு அளிக்க வந்த பொதுமக்களிடம் விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தனர். அந்தப் பிரசுரத்தில் ஈமுகோழி, நாட்டுக்கோழி வளர்ப்புத் திட்டம், கொப்பரைத் தேங்காய் திட்டம் என்ற பெயரில் மக்களை ஏமாற்றும் திட்டங்கள் அதிகரித்து வருகின்றன.
     இதனால், ஏழை, நடுத்தர மக்கள் தாங்கள் பாடுபட்டு சம்பாதித்த பணத்தை, மோசடி நிதிநிறுவனங்களில் முதலீடு செய்து ஏமாற வேண்டாம்.
     அதிக வட்டி தருவதாகவும், கவர்ச்சிகரமான பரிசுத் திட்டங்களை நம்பி ஏமாறக்கூடாது என்பதை வலியுறுத்தும் வகையில் துண்டுப் பிரசுரங்களில் வாசகங்கள் இடம்பெற்றிருந்தன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai