Enable Javscript for better performance
கோவில்பட்டி கோவிலில் தேர் சீரமைக்கும் பணி தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    கோவில்பட்டி கோவிலில் தேர் சீரமைக்கும் பணி தொடக்கம்

    By  கோவில்பட்டி  |   Published on : 20th August 2013 08:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவில்பட்டி செண்பகவல்லி அம்பாள் உடனுறை பூவனநாத சுவாமி கோவிலில் பழுதடைந்த நிலையில் உள்ள அம்பாள் தேர் சீரமைக்கும் பணி பூஜையுடன் திங்கள்கிழமை தொடங்கியது.
     இக்கோவிலில் ஒரு அம்பாள் தேர் மற்றும் ஒரு சுவாமி தேர் இருந்தது. இதில் அம்பாள் தேர், ஐப்பசித் திருவிழா மற்றும் பங்குனித் திருவிழாவுக்கும், சுவாமி தேர், பங்குனித் திருவிழாவுக்கு மட்டும் வீதியுலா வருவது வழக்கம்.
     2013-ம் ஆண்டு பங்குனித் திருவிழாவில் அம்பாள் தேர் பழுதடைந்த நிலையில் இருந்ததால், சுவாமித் தேர் மட்டுமே புறப்பாடு இருந்தது. இதையடுத்து, அம்பாள் தேரை சீரமைக்க இந்து அறநிலையத் துறை முடிவு செய்தது.
     இதையடுத்து, திருக்கோவில் நிதி ரூ. 16 லட்சத்து 85ஆயிரம் மதிப்பீட்டில் அம்பாள் தேர் சீரமைக்கும் பணியைத் தொடங்க முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில், புதுப்பிக்கும் பணி திங்கள்கிழமை பூஜையுடன் தொடங்கியது.
     இதை முன்னிட்டு, காலையில் சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து, அம்பாள் தேர் சீரமைக்கும் பணி தொடங்கியது.
     நிகழ்ச்சியில், கோவில்பட்டி எம்.எல்.ஏ. கடம்பூர் செ.ராஜு, கோவில் நிர்வாக அதிகாரி கசன்காத்தபெருமாள், கம்மவார் சங்கத் தலைவர் கனகராஜ், செயலர் ராதாகிருஷ்ணன், துணைத் தலைவர் வேல்ராஜன், இளைஞரணித் தலைவர் ஜெனரேஷ், தொழிலதிபர்கள் ஆர்.வி.துரைராஜ், பி.ஆர்.எஸ்.சீனிவாசன், மகேஷ்குமார்சேட், ஸ்ரீஹரா பள்ளி இயக்குநர் கோவிந்தராஜன், வழக்குரைஞர் சந்திரசேகர், அதிமுக முன்னாள் நகரச் செயலர் விஜயபாண்டியன், அதிமுக நிர்வாகிகள் சீனிவாசன், எல்.எஸ்.பாபு, செண்பகராமன், ராமச்சந்திரன், ரவிச்சந்திரன், முன்னாள் நகர்மன்ற துணைத் தலைவர் ரத்தினவேல்பாண்டியன், நகர்மன்ற உறுப்பினர் ஜெமினி என்ற அருணாசலசாமி உள்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
     மரக்கன்று நடும் விழா: கோவில்பட்டி அரசு மருத்துவமனை வளாகத்தில் அப்துல்கலாம் ரத்த தான கழகம் மற்றும் ஸ்டார் ரத்த தான கழகம் சார்பில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. விழாவுக்கு கோவில்பட்டி எம்.எல்.ஏ. கடம்பூர் செ.ராஜு தலைமை வகித்து, மரக்கன்றுகள் நடும் விழாவை தொடங்கிவைத்தார்.
     நிகழ்ச்சியில், மருத்துவமனை கண்காணிப்பாளர் ருக்மணி, நகராட்சி ஆணையர் வரதராஜ், நகர்மன்ற உறுப்பினர் முத்துலட்சுமி மற்றும் அதிமுக நிர்வாகிகள், ரத்த தான கழக தொண்டர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai