Enable Javscript for better performance
தாமிரவருணி ஆற்றில் அமலைச் செடிகளை அகற்ற இந்து முன்னணி வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    தாமிரவருணி ஆற்றில் அமலைச் செடிகளை அகற்ற இந்து முன்னணி வலியுறுத்தல்

    By  ஆறுமுகனேரி,  |   Published on : 20th August 2013 08:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஏரல் அருகில் ஸ்ரீசேர்மன் அருணாசல சுவாமி திருக்கோவில் அருகில் தாமிரவருணி ஆற்றில் ஆக்கிரமித்துள்ள அமலைச் செடிகளை அகற்றி பக்தர்கள் பாதுகாப்பாக குளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்து முன்னணி கோரி உள்ளது.
     தூத்துக்குடி தெற்கு மாவட்ட இந்து முன்னணி செயற்குழுக் கூட்டம் காயல்பட்டினம் ஓடக்கரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு வி.எஸ்.முருகேசன் தலைமை வகித்தார். திருச்செந்தூர் ஒன்றியத் தலைவர் ஜெயசிங், ஸ்ரீவைகுண்டம் கிழக்கு ஒன்றியச் செயலர் ஏ.பிரபாகர், ஒன்றிய துணைத் தலைவர் எம்.பாலமுருகன், ஆழ்வார் திருநகரி ஒன்றியத் தலைவர் ஒடை எஸ்.முருகேசன் மற்றும் சாத்தான்குளம் ஒன்றியத் தலைவர் எஸ்.என்.பாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
     மாநில துணைத் தலைவர் வி.பி.ஜெயக்குமார் மற்றும் மாவட்ட பொதுச்செயலர் பி.பி.சக்திவேல் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.
     இந்து முன்னணி மாநிலச் செயலர் சு.வெள்ளையப்பன், பாஜக மாநில பொதுச்செயலர் ஆடிட்டர் ரமேஷ் ஆகியோரை கொலைக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
     காயல்பட்டினம் நகராட்சி மன்றத்தில் தலைவர் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கிடையில் கருத்து வேறுபாடு காரணமாக நகராட்சி அத்தியாவசிய பணிகள் நடைபெறாமல் உள்ளது. மாவட்ட நிர்வாகம் துறை ரீதியான நடவடிக்கை எடுத்து மக்கள் பணிகள் தொடர கேட்டுக்கொள்ளப்பட்டது என்பன உள்ளிட்டதீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
     கூட்டத்தில் உடன்குடி ஒன்றியச் செயலர் ச.கேசவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பொன்.கந்தசாமி, மணிகண்டன், மாவட்ட துணைத் தலைவர்கள் பொன்.பரமேஸ்வரன், ஆர்.சுந்தரவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக நகரத் தலைவர் ஆர்.செல்வகுமார் வரவேற்றார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai