Enable Javscript for better performance
தூத்துக்குடியில் சமக ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    மத்திய அரசைக் கண்டித்து அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் திங்கள்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
     இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும், பெட்ரோல்-டீசல் விலையை தொடர்ந்து உயர்த்தி வருவதை நிறுத்த வேண்டும் மற்றும் ஏழை மக்களைப் பாதிக்கும் உணவுப் பாதுகாப்பு மசோதா சட்டம் கொண்டு வரும் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவிப்பது என்பனஉள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் தென்மண்டல செயலர் சுந்தர் தலைமை வகித்தார். மாவட்ட துணைச் செயலர்கள் மலர்விழி, கண்ணன், மாநகரச் செயலர் பிராபகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
     மாவட்ட இளைஞரணிச் செயலர் வில்சன், மின்வாரிய தொழிற்சங்க பிரிவு செயலர் ஜெபராக் டேவிட், கலை இலக்கிய பிரிவு நிர்வாகி சரத்பாலா, மாணவர் அணி குரூஸ் திவாகர், பகுதி செயலர் அந்தோனி உள்பட நிர்வாகிகள் பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai