Enable Javscript for better performance
தூத்துக்குடியில் தேமுதிகவினர் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    தூத்துக்குடியில் தேமுதிகவினர் ஆர்ப்பாட்டம்

    By  தூத்துக்குடி  |   Published on : 20th August 2013 08:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தூத்துக்குடி மாவட்டத்தில் கடற்கரைப் பகுதியில் முறைகேடாக தாது மணல் அள்ளப்பட்டு வருவதாக எழுந்த புகார் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வலியுறுத்தி தேமுதிக சார்பில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
     தூத்துக்குடி மாவட்ட கடலோரப் பகுதிகளில் முறைகேடாக தாது மணல் அள்ளப்படுவதாக எழுந்துள்ள புகார் குறித்து முறையாக விசாரணை நடத்த வேண்டும். குற்றவாளிகள் மீது முறையாக நடவடிக்கை எடுத்து, கைது செய்யவேண்டும்.
     இந்த விவகாரம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தூத்துக்குடி மாவட்ட தேமுதிக சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
     ஆர்ப்பாட்டத்துக்கு, தேமுதிக தெற்கு மாவட்டச் செயலர் சண்முகராஜா தலைமை வகித்தார். வடக்கு மாவட்டச் செயலர் பொன்ராஜ் முன்னிலை வகித்தார். தெற்கு மாவட்ட அவைத் தலைவர் ஆறுமுகநயினார், மாநகரச் செயலர் பவானி முத்துராஜ் உள்ளிட்ட தேமுதிக நிர்வாகிகள் பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.
     பின்னர் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai