Enable Javscript for better performance
தேசிய அஞ்சல் ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    தேசிய அஞ்சல் ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

    By  கோவில்பட்டி  |   Published on : 20th August 2013 08:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில்பட்டி அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் முன் தேசிய அஞ்சல் ஊழியர் சங்கத்தினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
     ஜெனரேட்டர் மெக்கானிக் மற்றும் எலக்ட்ரீசியன் பணிக்கு தகுதியான தொழில்நுட்ப தகுதி வாய்ந்தவர்களிடம் விருப்பம் பெற்று, நியாயமான முறையில் பணி நியமனம் செய்யவேண்டும். கோட்ட அலுவலகத்தில் உள்ள எழுத்தர் பதவிக்கு விருப்பம் கேட்ட நபரை நியமிக்க வேண்டும்.
     ஒவ்வொரு மாதத்துக்கும் தேவையான அளவு கம்ப்யூட்டர் பேப்பர்களை எல்லா அலுவலகங்களுக்கும் ஒவ்வொரு மாதமும் 3-ம் தேதிக்குள் கிடைக்க நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். கிராமப்புற ஊழியர்களின் பணி நிரந்தரம், அலவென்ஸ், விடுபட்ட ஊதியம் ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு கிராமப்புற ஊழியர்களின் மாநிலத் தலைவர் மாடசாமி, கோட்டத் தலைவர்கள் ராஜேந்திரன் (அஞ்சல் 3), காளிமுத்து (அஞ்சல் 4) ஆகியோர் தலைமை வகித்தனர்.
     கோட்ட செயலர்கள் சமுத்திரப்பாண்டி (அஞ்சல் 3), யோசுவா அஞ்சல் 4) மற்றும் பாலகிருஷ்ணன், பாலசுப்பிரமணியன், முருகேசன் உள்பட தேசிய அஞ்சல் ஊழியர் சங்கத்தினர் திரளானோர் கலந்துகொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai