Enable Javscript for better performance
பழையகாயல் அருகே மோதல்:  இருவருக்கு அரிவாள் வெட்டு; 2 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    பழையகாயல் அருகே மோதல்:  இருவருக்கு அரிவாள் வெட்டு; 2 பேர் கைது

    By  ஆறுமுகனேரி,  |   Published on : 20th August 2013 08:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பழையகாயல் அருகே இளம்பெண் மாயமான சம்பவம் தொடர்பாக ஏற்பட்ட மோதலில் இருவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இது தொடர்பாக போலீஸôர் இருவரை கைது செய்துள்ளனர்.
     புல்லாவெளியைச் சேர்ந்த இளம்பெண் கடந்த 18 ஆம் தேதி காணவில்லையாம். அதே சமயத்தில் அந்த பகுதியைச் சேர்ந்த செல்லத்துரை மகனான தினேஷ் என்ற இளைஞரையும் காணவில்லையாம். இரு குடும்பத்தினரும் மாலை வரை பல இடங்களிலும் தேடியுள்ளனர். இருவரைப் பற்றியும் எந்த தகவலும் கிடைக்காததால் தினேஷ்தான் அந்த இளம்பெண்ணை கடத்தி சென்றதாகக் கூறி இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது.
     இந்த மோதலில் செல்லச்சாமி மகன் ரமேஷ் (29), செல்லத்துரை மகன் ராஜேஷுக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. இருவரும் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இச்சம்பவம் தொடர்பாக இரு தரப்பினரும் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீஸôர் தனித்தனியே வழக்குப் பதிந்து, தினேசின் சகோதரர்களான சுரேஷ், ரமேஷ், ராஜேஷ் உள்ளிட்ட நால்வர் மீதும், மற்றொரு தரப்பைச் சேர்ந்த கணேசன், சந்தனராஜ், பால்சாமி, ராஜேஷ், செல்லச்சாமி, பாரத், ரமேஷ், வேல்சாமி, மாரிமுருகன், ஜெயமுருகன், வேல்ராஜ், ரவீந்திரன், முத்துகிருஷ்ணன், பாலமுருகன் ஆகிய 14 பேர் உள்ளிட்ட 18 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
     இதற்கிடையில் சந்திரலேகாவின் தாயாரான வாசுகி தன் மகளை கடத்தியதாக கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீஸôர் வழக்கு பதிவு செய்து, மாயமான தினேசையும் தேடி வருகின்றனர்.
     இந்த வழக்கில் புல்லாவெளியைச் சேர்ந்த செல்லச்சாமியையும் (51),பொட்டல்காட்டைச் சேர்ந்த ரவீந்திரனையும் (48) போலீஸôர் கைது செய்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai