Enable Javscript for better performance
\\\"பிற்படுத்தப்பட்டோர் கல்வி  உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்\\\'- Dinamani

சுடச்சுட

    

    "பிற்படுத்தப்பட்டோர் கல்வி  உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்'

    By  தூத்துக்குடி  |   Published on : 20th August 2013 08:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தூத்துக்குடி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்ட மாணவர், மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
     இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் எம். ரவிக்குமார் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
     தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின்கீழ் படிக்கும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவர், மாணவிகளுக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களின் கீழ் உதவித்தொகை வழங்கி வருகிறது.
     அரசு மற்றும் அரசு உதவிபெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு எந்தவித நிபந்தனையும் இன்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. முதுநிலை, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு போன்ற பிற படிப்புகளுக்கு பெற்றோர் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சம் வரை உள்ள மாணவர்,மாணவிகள் பயன்பெறலாம்.
     அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை ஆங்கில வழிக்கல்வி படிக்கும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவர்களுக்கு எந்தவித நிபந்தனையும் இன்றி, அவர்கள் செலுத்தும் படிப்பு கட்டணம் ஈடு செய்யப்படுகிறது. பிற்படுத்தப்பட்ட மாணவர்களை பொறுத்தவரை ஆண்டு வருமான வரம்பு ரூ.2 லட்சத்துக்குள் இருக்க வேண்டும்.
     உதவித்தொகைக்கான விண்ணப்பப் படிவங்களை மாணவர்கள், அவர்கள் படிக்கும் கல்வி நிறுவனங்களிலேயே பெற்று பூர்த்தி செய்து உரிய சான்றுகளுடன் கல்வி நிலையங்களில் தாக்கல் செய்ய வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai