Enable Javscript for better performance
பெருங்குளம் குளத்தில் கருவேலமரங்கள் அகற்றம்- Dinamani

சுடச்சுட

    

    பெருங்குளம் குளத்தில் கருவேலமரங்கள் அகற்றம்

    By  ஸ்ரீவைகுண்டம்,  |   Published on : 20th August 2013 08:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெருங்குளம் குளத்தில் கருவேலமரங்களை அகற்றும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.
     தாமிரவருணி ஆற்றின் கடைசி அணையான ஸ்ரீவைகுண்டம் அணையின் கீழ் பகுதியிலும், அதன் பாசன குளங்களிலும் அமலைச் செடிகளும், கருவேலமரங்களும் அதிகரித்து வருவதால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருகிறது. இதையடுத்து அம் மரங்களை அகற்ற வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கையை சுட்டிக்காட்டி தினமணி நாளிதழில் செய்தி வெளியாகி இருந்தது. இந்நிலையில் பெருங்குளம் பேரூராட்சித் தலைவர் சுந்தரராஜன், பெருங்குளம் குளத்தில் கருவேலமரங்களை அகற்றும் பணியை தொடங்கிவைத்தார்.
     இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது:
     நவதிருப்பதி கோவில்களில் ஒன்றான பெருங்குளம் மாயகூத்தர் பெருமாள் கோவிலுக்கு அருகிலுள்ள குளத்தின் படித்துறைகளை மறைக்கும் அளவுக்கு ஆக்கிரமித்துள்ள கருவேலமரங்களை, பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி அகற்ற நடவடிக்கை எடுத்துள்ளேன் என்றார் அவர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai