Enable Javscript for better performance
பெருங்குளம் பேரூராட்சி வளாகத்தில் உள்ள  டாஸ்மாக் கடையை அகற்ற கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    பெருங்குளம் பேரூராட்சி வளாகத்தில் உள்ள  டாஸ்மாக் கடையை அகற்ற கோரிக்கை

    By  ஸ்ரீவைகுண்டம்,  |   Published on : 20th August 2013 08:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெருங்குளம் பேரூராட்சி அலுவலக வளாகத்தில் செயல்படும் டாஸ்மாக் கடையை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
     பெருங்குளம் பேரூராட்சி அலுவலக வளாகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக டாஸ்மாக் மதுக்கடை செயல்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்களுக்கு பல இடையூறுகள் ஏற்படுவாதால் இக்கடையை அகற்ற வேண்டுமென பல முறை கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. டாஸ்மாக் கடையை பேரூராட்சி அலுவலக வளாகத்தில் இருந்து வேறு இடத்தில் செயல்பட இடம் அளிப்பதாக பேரூராட்சியில் தீர்மானம் இயற்றப்பட்டும் எந்த விதமான பலனும் இல்லை.
     எனவே, பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai