Enable Javscript for better performance
மாட்டு வண்டி மீது பைக் மோதல்: தொழிலாளி சாவு- Dinamani

சுடச்சுட

    

    மாட்டு வண்டி மீது பைக் மோதல்: தொழிலாளி சாவு

    By  கோவில்பட்டி  |   Published on : 20th August 2013 08:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விளாத்திகுளத்தில் திங்கள்கிழமை முன்னால் சென்று கொண்டிருந்த மாட்டுவண்டி மீது பைக் மோதியதில் தொழிலாளி இறந்தார்.
     விளாத்திகுளத்தையடுத்த சித்தவநாயக்கன்பட்டியைச் சேர்ந்த அய்யம்பெருமாள் மகன் கணேசன் (40). மரம் வெட்டும் தொழிலாளி. இவர் பைக்கில் விளாத்திகுளம் நோக்கிச் சென்று கொண்டிருந்தாராம்.
     அப்போது, விளாத்திகுளம் பயணியர் விடுதி அருகே சென்று கொண்டிருந்த போது, முன்னால் சென்று கொண்டிருந்த மாட்டு வண்டி மீது பைக் மோதியதாம். இதில் பலத்த காயமடைந்த கணேசன், விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு அவர் இறந்தார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai